தமிழ்நாடு
அணை நீரில் பொங்கிவரும் ரசாயன நுரை: வட்டாட்சியர் ஆய்வு
அணை நீரில் பொங்கிவரும் ரசாயன நுரை: வட்டாட்சியர் ஆய்வு
ஓசூர் அருகேயுள்ள கெலவரப்பள்ளி அணையிலிருந்து திறந்து விடப்பட்ட தண்ணீரில் மிதக்கும் ரசாயன நுரை ஊருக்குள் புகுந்து வருவது மக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
தென்பெண்ணை நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர்மழையால் கெலவரப்பள்ளி அணை மொத்த கொள்ளளவான 44. 28 அடியில், 43.70 அடி நீர் நிரம்பியுள்ளது. அணைக்கு வரும் 4 ஆயிரம் கன அடி தண்ணீர் முழுவதுமாக வெளியேற்றப்படுகிறது. அந்த நீர் முழுவதும் ரசாயான நுரையாக மிதந்து வருகிறது. அந்த நுரை ஊருக்குள் நுழைந்து வருவதால் அங்கு வட்டாட்சியர் புஷன் குமார் தலைமையில் அய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.