\
car accident
car accidentfreepik

ஓசூர்: சாலையோரமாக நிறுத்த முயன்ற லாரியின் பின்னால் கார் மோதிய விபத்து – 3 இளைஞர்கள் உயிரிழப்பு

ஒசூர் அருகே, சாலையோரமாக நிறுத்த முயன்ற லாரியின் பின்னால் வந்த கார் மோதிய விபத்தில் 3 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
Published on

கிருஷ்ணகிரி மாவட்டம் பெங்களூர் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஒசூர் அடுத்த கோனேரிப்பள்ளி என்னுமிடத்தில் முன்னால் சென்று கொண்டிருந்த சரக்கு லாரியில் பின்னால் வந்த கார் மோதி கோர விபத்து ஏற்பட்டது. இதில் காரில் பயணித்த 3 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 2 இளைஞர்கள் கவலைக்கிடமான நிலையில், கிருஷ்ணகிரி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

சாலை விபத்து
சாலை விபத்து
car accident
அண்ணா பல்கலைக்கழக மாணவி விடுதியில் தற்கொலை - கடிதத்தில் இருந்த காரணம் - காவல்துறையினர் விசாரணை!

காரில் பயணித்தவர்கள் திருப்பூர் அடுத்த வீரபாண்டி பகுதியைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என சூளகிரி போலீசார் தெரிவித்தனர். முன்னால் சென்ற சரக்கு லாரியின் ஓட்டுநர் தப்பியோடிய நிலையில், விபத்திற்கான காரணம் தற்போது வரை தெரியவில்லை.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com