\
பாலம் இல்லாததால் ஆற்றில் சடலத்தை சுமந்து சென்ற அவலம் - பொதுமக்கள் கண்ணீர்

பாலம் இல்லாததால் ஆற்றில் சடலத்தை சுமந்து சென்ற அவலம் - பொதுமக்கள் கண்ணீர்

பாலம் இல்லாததால் ஆற்றில் சடலத்தை சுமந்து சென்ற அவலம் - பொதுமக்கள் கண்ணீர்
Published on

சூளகிரி அருகே பாலம் இல்லாததால் உயிரிழந்த மூதாட்டியின் சடலத்தை ஆற்று நீரில் சுமந்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

ஓசூர் அடுத்த சூளகிரி அருகே உள்ள பீளாளம் கிராமத்தைச் சேர்ந்த சக்கார்லம்மா (65) என்ற மூதாட்டி நேற்று உடல்நலக் குறைவால் உயிரிழந்தார், இவருக்கு பிள்ளைகள் யாரும் இல்லாத நிலையில், உறவினர்கள் சார்பில் இறுதி சடங்குகள் மேற்கொள்ளப்பட்டன.

இதையடுத்து மூதாட்டியின் சடலத்தை மயானத்திற்கு கொண்டு செல்ல வழக்கமாக பயன்படுத்தி வந்த ஆற்று வழியில் தற்போது, தொடர் மழை காரணமாக ஆற்றில் வெள்ளநீர் செல்கிறது. இதனால் மூதாட்டியின் சடலத்தை ஆற்றின் இருபுறங்களிலும் கயிறு கட்டி, மூதாட்டின் உறவினர்கள் சுமந்து சென்றனர். இறுதி சடங்கில் பங்கேற்ற பெண்களும் கயிறை பிடித்துக் கொண்டு ஆற்றை கடந்தனர்.

மழைக் காலங்களில் ஆற்றில் நீர் பெருக்கெடுத்தால், இதுபோன்ற அவலநிலை தொடர்வதாகவும், அரசு ஆற்றின் மீது தரைப்பாலத்தை அமைத்துத் தர வேண்டுமென பீளாளம் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com