ஓசூர்: முன்விரோதம் காரணமாக இளைஞர் வெட்டிக்கொலை

ஓசூர்: முன்விரோதம் காரணமாக இளைஞர் வெட்டிக்கொலை

ஓசூர்: முன்விரோதம் காரணமாக இளைஞர் வெட்டிக்கொலை
Published on

ஒசூர் அருகே முன்விரோதம் காரணமாக இளைஞர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்; மத்திகிரி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த சொப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மோகன் பாபு என்பவருக்கும் மற்றொரு தரப்பினருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், மோகன் பாபுவை 6 பேர் கொண்ட கும்பல் கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடினர். இதையடுத்து இரத்த வெள்ளத்தில் கிடந்த மோகன் பாபுவை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைகாக ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர்.

அங்கு மோகன் பாபுவை பரிசோதித்த மருத்துவர், அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தார். இதையடுத்து மோகன் பாபுவின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து தகவல் அறிந்து அங்கு வந்த மத்திகிரி போலீசார், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதல்கட்ட விசாரணையில் .மோகன் பாபுவை கத்தியால் குத்திக்கொன்றது அதே கிராமத்தைச் சேர்ந்த திலக் (22), மூர்த்தி (21), பவன் (22), ஹேம்நாத் (21), சுரேஷ(;22), ராகேஷ்(20) என தெரியவந்துள்ளது. இதையடுத்து அந்த 6 பேரை மத்திகிரி போலிசார் தேடிவருகின்றனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com