தமிழ்நாடு
துரைமுருகன் உடல்நிலை சீராக உள்ளது - மருத்துவமனை நிர்வாகம்
துரைமுருகன் உடல்நிலை சீராக உள்ளது - மருத்துவமனை நிர்வாகம்
கொரோனா தொற்றுக்கு சிகிச்சைபெற்று வரும் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் உடல்நிலை சீராக உள்ளது என ரேலா மருத்துவமனை தெரிவித்துள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்று உறுதியான திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் சென்னை குரோம்பேட்டையில் உள்ள ரேலா மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார்.
சிகிச்சைபெற்றுவந்த அவரின் உடல்நிலை சீராக உள்ளது என மருத்துவமனை தெரிவித்துள்ளது. மேலும், கவலைப்படும்படி அவரது உடல்நிலை இல்லை எனவும், மருத்துவக்குழு அவருடைய இதயத்துடிப்பு மற்றும் நாடித்துடிப்பு உள்ளிட்ட அனைத்தையும் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.