தினமும் 8 அடி... 25 அடி தூரம் நகர்த்தி வைக்கப்பட்ட வீடு! திருப்பூரில் நடந்த சுவாரஸ்ய சம்பவம்!

திருப்பூரில் ஒருநாளைக்கு 8 அடி தூரம் என்ற கணக்கில் 25 அடி தூரம் உள்ள ஒரு வீடு, இடிக்கப்படாமல் நகர்த்தி வைக்கப்பட்டுள்ளது.

வீட்டை இடிக்காமல் வீட்டை நகர்த்தும் உள்நாட்டு தொழில்நுட்பமான ஹைட்ராலிக் ஷிப்டிங் மூலம் இரண்டு பெட்ரூம் உள்ள வீடு 25 அடி தூரம் நகர்த்தப்பட்டது. இச்சம்பவம் முதன்முதலாக திருப்பூரில் நடந்துள்ளது.

ஸ்க்ரூ ஜாக்கி பயன்படுத்தி கட்டடத்தை அஸ்திவாரத்தில் இருந்து பிரித்து வீட்டை நகர்த்தினர். வீட்டில் உள்ள பழைய தூண்கள் அடித்தளத்தில் இருந்து அறுத்து எடுக்கப்பட்டு அவற்றை புதிய அடித்தளத்துடன் இணைத்து கட்டுமானத்தை மேற்கொள்கின்றனர். இப்படி ஒருநாளைக்கு 8 அடி தூரம் வீட்டை நகர்த்தினர்.

இந்த ஹைட்ராலிக் ஷிப்டிங் தொழில்நுட்பத்தின் மூலம் சிறிய வீடு, பெரிய வீடு, கோயில்கள், 5 மாடி கட்டடங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், கல்லூரிகள், வணிக வளாகங்கள் என எதுவாக இருந்தாலும் எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் நகர்த்தவும் உயர்த்தவும் முடியும் என்றும் புதிதாக ஒரு கட்டடத்தை கட்டுவதற்கு ஆகும் செலவைக் காட்டிலும் இதுபோன்ற தொழில்நுட்பத்தின் மூலம் வீட்டை உயர்த்துவதற்கும் நகர்த்துவதற்கும் ஆகும் செலவு மிகக் குறைவு என்றும் வல்லுநர்கள் கூறுகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com