பாதி விலைக்கு வீட்டுப்பொருட்கள் : நூதன மோசடி செய்யும் பெண்

பாதி விலைக்கு வீட்டுப்பொருட்கள் : நூதன மோசடி செய்யும் பெண்
பாதி விலைக்கு வீட்டுப்பொருட்கள் : நூதன மோசடி செய்யும் பெண்

மதுரையில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் நூதன முறையில் மோசடி செய்த பெண்ணை சிசிடிவி காட்சிகள் மூலம் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

மதுரை லட்சுமிபுரத்தில் வனிதா என்ற பெண் தனது குடும்பத்துடன் தங்கியுள்ளார். வீட்டில் இருப்பவர்கள் வேலைக்கு சென்றுவிட, வீட்டில் வனிதா மட்டும் தனியாக இருந்துள்ளார். அப்போது பள்ளி மாணவ, மாணவிகளுக்கான சீருடை தைக்க ஆர்டர் கொடுப்பதாகக் கூறி வனிதாவின் வீட்டிற்கு பெண் ஒருவர் வந்துள்ளார். அப்பெண் தான் ஒரு ஆசிரியர் என்றும், தன்னுடன் வேலை பார்க்கும் ஆசிரியர் வேறு ஊருக்கு பணி மாறுதலாகிச் செல்வதால் வீட்டு உபயோகப் பொருட்களை குறைந்த விலைக்கு விற்க இருப்பதாகவும் ஆசை வார்த்தை கூறியுள்ளார். 

இதனால் அந்தப் பொருட்களை வாங்க திட்டமிட்டு அனிதா, பக்கத்துவீட்டுப் பெண்ணிடம் விஷயத்தை கூறியுள்ளார். இதையடுத்து இருவரும் ஆளுக்குப்பாதியாக காசைப்போட்டு ரூ.36 ஆயிரம் திரட்டியுள்ளனர். பின்னர் வனிதா மற்றும் பக்கத்து வீட்டு பெண்ணை அழைத்துக் கொண்டு ஆரப்பாளையத்திற்கு சென்ற மர்மப் பெண், அவர்களிடமிருந்த ரூ.36 ஆயிரம் பணத்தை பெற்றுக் கொண்டு ஒரு இடத்தில் காத்திருக்கும்படி கூறியிருக்கிறார். 

நீண்ட நேரமாகியும் அந்தப் பெண் திரும்பி வராததையடுத்து, தாங்கள் ஏமாற்றப்பட்டதை இருவரும் உணர்ந்துள்ளனர். இதையடுத்து விளக்கு தூண் காவல் நிலையத்தில் இருவரும் புகார் கொடுத்துள்ளனர். சிசிடிவி காட்சிகள் மூலம் அந்தப் பெண் அடையாளம் காணப்பட்டார். அதைக்கொண்டு விசாரித்ததில், ஏற்கனவே அப்பெண் எல்.ஐ.சி ஏஜென்ட் போல நடித்து பல்வேறு பகுதியில் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. தற்போது அந்தப் பெண்ணை காவல்துறையினர் விரமாகத் தேடி வருகின்றனர்.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com