\
மழை எதிரொலி: தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை

மழை எதிரொலி: தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை

மழை எதிரொலி: தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை
Published on
தமிழ்நாட்டில் தொடர் கனமழை காரணமாக 5 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. இந்நிலையில், வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து வருகின்றனர். இந்நிலையில் தொடர் கனமழை காரணமாக பெரம்பலூர், திருவண்ணாமலை, அரியலூர், விழுப்புரம். கடலூர் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று மழை எதிரொலியாக கொடைக்கானலிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com