கனமழை எதிரொலி: எத்தனை மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?

கனமழை எதிரொலி: எத்தனை மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?
கனமழை எதிரொலி: எத்தனை மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?

கனமழை எச்சரிக்கையால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர் உள்ளிட்ட 28 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. சில மாவட்டங்களில் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பல பகுதிகளில் மழை பெய்தது. சென்னை மற்றும் புறநகர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. தாழ்வான பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல் தேங்கியதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்தனர். இதையொட்டி பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், இன்று மொத்தம் தமிழ்நாட்டில் 28 மாவட்டங்களில் உள்ள கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, தஞ்சாவூர், திருச்சி, நாகப்பட்டினம், திருவாரூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, விழுப்புரம், அரியலூர், கடலூர், புதுக்கோட்டை, சேலம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, ராமநாதபுரம், மதுரை, தேனி மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.

இதேபோல தருமபுரி, திண்டுக்கல், சிவகங்கை, கரூர் மற்றும் நாமக்கலில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் பள்ளிகளில் 8-ம் வகுப்பு வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர புதுச்சேரி மாநிலத்தில், புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் இன்றும், நாளையும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com