தமிழ்நாடு
தமிழகத்தில் நாளை 13 மாவட்டங்களுக்கு பொதுவிடுமுறை!
தமிழகத்தில் நாளை 13 மாவட்டங்களுக்கு பொதுவிடுமுறை!
நிவர் புயல் காரணமாக தமிழகத்தில் நாளை 13 மாவட்டங்களுக்கு பொதுவிடுமுறை என முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
நிவர் புயல் இன்று நள்ளிரவு அல்லது நாளை அதிகாலை அதிதீவிர புயலாக கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. மாமல்லபுரத்திற்கும் காரைக்காலுக்கு இடையே புயல் கரையை கடக்க உள்ளது.
இந்நிலையில் சென்னை, வேலூர், கடலூர், விழுப்புரம், நாகை, திருவாரூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தஞ்சை, மயிலாடுதுறை, திருவண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு பொதுவிடுமுறை விடப்பட்டுள்ளது. இன்று தமிழகம் முழுவதும் பொதுவிடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் நாளை 13 மாவட்டங்களுக்கு மட்டும் பொதுவிடுமுறை அளித்து தமிழக அரசு அறிவித்துள்ளது.