பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறைpt web
தமிழ்நாடு
கனமழை எதிரொலி.. நாளை 9 மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கும், 3 மாவட்ட பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிப்பு!
கனமழை எச்சரிக்கை எதிரொலி காரணமாக தமிழகத்தில் 12 மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளதால், தமிழகத்தின் பல மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உருவாகியிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது நாளை நவம்பர் 27-ம் தேதியன்று புயலாக உருமாற வாய்ப்பிருப்பதாக கூறப்படும் நிலையில், 12 மாவட்டங்களுக்கு கல்லூரி மற்றும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
9 மாவட்டத்தில் கல்லூரி, 3 மாவட்டத்தில் பள்ளிக்கு விடுமுறை..
கனமழை எச்சரிக்கை காரணமாக நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர், தஞ்சாவூர், புதுச்சேரி, காரைக்கால், திருவள்ளூர் மற்றும் விழுப்புரம் முதலிய மாவட்டங்களுக்கு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மழை காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறைpt web
அதேபோல சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் முதலிய மாவட்டங்களுக்கு பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.