\
ஈரோடு: அரசுப் பேருந்து மேற்கூரையில் ஓட்டை- இருக்கைகளில் மழை கொட்டுவதால் பயணிகள் அவதி

ஈரோடு: அரசுப் பேருந்து மேற்கூரையில் ஓட்டை- இருக்கைகளில் மழை கொட்டுவதால் பயணிகள் அவதி

ஈரோடு: அரசுப் பேருந்து மேற்கூரையில் ஓட்டை- இருக்கைகளில் மழை கொட்டுவதால் பயணிகள் அவதி
Published on: 

ஈரோட்டில் இருந்து பவானி செல்லும் அரசு பேருந்தின் மேற்கூரையில் உள்ள ஓட்டை வழியாக மழை தண்ணீர் ஒழுகியதால் பயணிகள் மிகவும் சிரமம் அடைந்தனர்.

ஈரோட்டில் இருந்து சித்தோடு வழியாக பவானி செல்லும் 3-ம் எண் அரசுப் பேருந்தில் மேற்கூரையில் ஓட்டை இருந்துள்ளது. இன்று பெய்த மழையால் பேருந்தில் உள்ள ஓட்டை வழியாக மழை தண்ணீர் பயணிகள் இருக்கையில் வழிய ஆரம்பித்தது. இதனால் பேருந்தில் பயணம் மேற்கொள்ளும் மக்கள், தலையில் பிளாஸ்டிக் பைகள் வைத்து பயணம் மேற்கொண்டனர்.

மேலும், பயணிகள் இருக்கையில் அமராமல் நின்று கொண்டு செல்லும் அவல நிலை ஏற்பட்டது. மழை காலங்களில் இதுபோன்று பழுதடைந்து உள்ள அரசுப் பேருந்துகளை கண்டறிந்து சரி செய்தபிறகே இயக்க வேண்டும் என்பது பயணிகளின் எதிர்பார்ப்பதாக உள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com