தர்மபுரி மாவட்டம் பிலிகுண்டுலுவுக்கு வரும் நீர்வரத்தில் ஏற்ற, இறக்கம் இருப்பதால், ஒகேனக்கலில் பரிசல் இயக்க 13ஆவது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக, கபினி, கிருஷ்ணசாகர் அணையிலிருந்து அவ்வப்போது திறந்துவிடப்படும் தண்ணீர் அதிகரிப்பதும், குறைவதுமாக இருப்பதால் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. தற்போது பிலிகுண்டுலுவிற்கு 7 ஆயிரத்து 500 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது.
அதனால், ஒகேனக்கல் வரும் சுற்றுலா பயணிகள் பரிசலில் செல்ல முடியாமல், நீர்வீழ்ச்சியில் மட்டும் குளித்துவிட்டு ஏமாற்றத்துடன் திரும்பி செல்வதாகத் தெரிவிக்கின்றனர். அதேநேரம், ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் உள்ள பரிசல் ஓட்டிகள், சமையல் கலைஞர்கள் உள்ளிட்ட தொழிலாளர்கள் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருப்பதாக வேதனை தெரிவிக்கின்றனர்.