\
ஓகேனக்கல்லில் 8ஆவது ‌நாளாக ப‌ரிசல் இயக்கத்தடை

ஓகேனக்கல்லில் 8ஆவது ‌நாளாக ப‌ரிசல் இயக்கத்தடை

ஓகேனக்கல்லில் 8ஆவது ‌நாளாக ப‌ரிசல் இயக்கத்தடை
Published on

காவேரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக, ஒகேனக்கலில் பரிசல் இயக்க 8வது நாளாக தடை நீடிக்கிறது. 

கர்நாடக மாநிலத்தில் உள்ள காவிரி நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் பெய்த தொடர் மழை காரணமாக ஒகேனக்கல் அருவிக்கு நீர்வரத்து அதிகரித்தது. நீர்வரத்து அதிகரிப்பின் காரணமாக பரிசல் இயக்கவும், சுற்றுலா பயணிகள் குளிக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது. இந்நிலையில் கடந்த 2 நாட்களாக காவேரி ஆற்றில் நீர்வரத்து 13,000 கன அடியாக உள்ள நிலையில், தமிழக எல்லையான பிலிகுண்டுவுக்கு 12,500 கன அடியாக நீர்வரத்து குறைந்துள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பரிசல் இயக்க தொடர்ந்து 8வது நாளாக மாவட்ட நிர்வாகம் முழுமையாக தடை விதித்துள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com