தமிழ்நாடு
விதிமுறைகளை மீறி பரிசல் இயக்கினால் உரிமம் ரத்து !
விதிமுறைகளை மீறி பரிசல் இயக்கினால் உரிமம் ரத்து !
கோடை விடுமுறையில் ஒகேனக்கலுக்கு வரும் சுற்றுலா பயணிகளை அளவுக்கு அதிகமாக பரிசலில் ஏற்றிச் செல்வதாக புகார் எழுந்துள்ளது.
ஒகேனக்கல் மெயினருவியில் குளிப்பதும், தொங்கு பாலத்திலிருந்து காவேரியில் அழகை ரசிப்பதற்கு பரிசல் பயணம் ஏற்பாடு செய்யப்படுகிறது. பரிசல் பயணத்தில் பாதுகாப்பு உடை அணிய வேண்டும் என்றும் நான்கு பெரியவர்கள் வரை மட்டுமே ஏற்றிச் செல்லும் விதிமுறை இருக்கிறது. ஆனால் சில பரிசல் உரிமையாளர்கள் இதை மீறுவதாக புகார் எழுந்தது. இதுகுறித்து பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணனை தொடர்பு கொண்டு கேட்டபோது, பரிசல் பயணத்தில் கட்டாயம் பாதுக்காப்பு உடை அணிய வேண்டும் என்றும் 4 பயணிகள் மட்டுமே பரிசலில் செல்ல அரசு அனுமதிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார். இதனை மீறிவோரின் பரிசல் உரிமம் ரத்து செய்யப்படும் என எச்சரித்துள்ளார்.