கர்ப்பிணிக்கு எச்ஐவி தொற்று ரத்தம் ஏற்றிய ஊழியர்: அரசு மருத்துவமனை அவலம்
சாத்தூர் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிக்கு எச்ஐவி தொற்று ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரத்தில் ரத்த வங்கி ஊழியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் அரசு மருத்துவமனை உள்ளது. இங்கு 8 மாத கர்ப்பிணியான சுதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) வழக்கமான சிகிச்சைக்கு சென்றுள்ளார். அப்போது சுதாவின் உடலில் ரத்தம் குறைவாக இருப்பதாக கூறி ரத்தம் ஏற்ற அறிவுறுத்தியுள்ளனர். சுதாவும் ரத்தம் ஏற்ற சம்மதம் தெரிவித்துள்ளார்.
அதன்படி சுதாவிற்கு ரத்தம் ஏற்றப்பட்டுள்ளது. ஆனால் ஏற்றப்பட்ட ரத்தம் எச்ஐவி தொற்று கொண்ட ரத்தம் என தெரியவந்துள்ளது. இதனையடுத்து யாரிடம் இருந்தது அந்த இரத்தம் பெறப்பட்டது என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
அப்போது இளைஞர் ஒருவரின் ரத்தம்தான் கர்ப்பிணியான சுதாவுக்கு ஏற்றப்பட்டது தெரியவந்தது. அந்த இளைஞர் வெளிநாடு செல்வதற்காக ரத்த பரிசோதனை செய்திருக்கிறார். அப்போது ரத்தத்தில் எச்ஐவி தொற்று இருந்திருக்கிறது. ஆனால் அலட்சியமாக இருந்துள்ள மருத்துவ ஊழியர்கள் எச்ஐவி தொற்று கொண்ட ரத்தத்தை கர்ப்பிணிக்கு பெண்ணுக்கு ஏற்றியுள்ளனர். இதுதொடர்பாக ரத்த வங்கி ஊழியர் வளர்மதி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.