“மருத்துவர்களின் அலட்சியமே காரணம்” - எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்ட பெண் புகார்

“மருத்துவர்களின் அலட்சியமே காரணம்” - எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்ட பெண் புகார்

“மருத்துவர்களின் அலட்சியமே காரணம்” - எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்ட பெண் புகார்

அலட்சியத்துடன் செயல்பட்ட கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட பெண் சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தொற்று உள்ள ரத்தம் செலுத்தப்பட்டதால் தனக்கு எச்.ஐ.வி பாதிப்பு ஏற்பட்டதாக ,சென்னையைச் சேர்ந்த பெண் ஒருவர் குற்றச்சாட்டு தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்திற்கு நேரில் வந்து அந்த பெண் புகார் அளித்தார். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தனக்கும், தனது குழந்தைக்கும் மருத்துவ சிகிச்சை அளிக்க அரசு உதவிட வேண்டும் என கேட்டுக் கொண்டார். எச்.ஐ.வி பாதிப்பு இருப்பது தெரிந்தால், சமூகம் தன்னை புறக்கணித்துவிடும் என்பதாலேயே இத்தனை நாட்கள் புகார் அளிக்காமல் இருந்ததா‌க விளக்கமளித்துள்ளார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com