\
வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு: திருமாவளவன் வரவேற்பு

வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு: திருமாவளவன் வரவேற்பு

வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு: திருமாவளவன் வரவேற்பு
Published on

தேர்தலில் சாதி, மொழி, இனம், மதத்தின் பெயரால் ‌வாக்கு கேட்கக் கூடாது என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வரவேற்றள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகம் வரலாறு காணாத அளவில் வறட்சியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தண்ணீரின்றி பயிர்கள் கருகுவதால் விவசாயிகள் தற்கொலை தொடரும் நிலையில், தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறி‌விக்க மாநில அரசு, மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். ஜவஹர்லால் நேரு பல்கலைகழகத்தில் தலித் வகுப்பை சார்ந்த ஆராய்ச்சி மாணவர்கள் திட்டமிட்டு பழிவாங்கப்படுகிறார்கள் அதனை விடுதலை சிறுத்தைகள் கட்சி வன்மையாக கண்டிப்பதாகவும் அவர் கூறினார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com