'திமுகவை உடைக்க அக்கட்சியிலேயே 3 குழுக்கள்' - இந்து முன்னணி மாநில தலைவர் விமர்சனம்

'திமுகவை உடைக்க அக்கட்சியிலேயே 3 குழுக்கள்' - இந்து முன்னணி மாநில தலைவர் விமர்சனம்
'திமுகவை உடைக்க அக்கட்சியிலேயே 3 குழுக்கள்' - இந்து முன்னணி மாநில தலைவர் விமர்சனம்

திமுகவை உடைக்கவும் கைப்பற்றவும் அக்கட்சியிலேயே மூன்று குழுக்கள் செயல்பட்டு வருவதாக இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இந்து சமூக மக்களை இழிவாக பேசியதாக ஆ.ராசாவை கண்டித்து முழு கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்து முன்னணி சார்பில் அறிவிக்கப்பட்ட இக்கடையடைப்பு போராட்டத்தை முன்னிட்டு மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில்  பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. கோவை மாவட்ட காவல்துறை எஸ்.பி பத்ரிநாராயணன் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், மேட்டுப்பாளையத்திற்கு வருகை தந்த இந்து முன்னணி மாநில மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் செய்தியாளர்களிடம் பேசியதாவது, "இந்து சமய மக்களை ஆபாசமாக பேசிய ஆ.ராசாவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து நடைபெற்று வரும் கடையடைப்பு போராட்டம்  வணிகர்களின் ஆதரவோடு நூறு சதவீதம் வெற்றி பெற்றுள்ளது. திமுகவை பிளக்கவும் கைப்பற்றவும் அக்கட்சியிலேயே மூன்று குழுக்கள் செயல்பட்டு வருகிறது. கனிமொழி உள்ளடக்கிய ஆ.ராசா  தலைமையில் ஒரு அணி, அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் ஒரு குழு மற்றும் முதல்வரின் மருமகன் சபரீசன் தலைமையில் ஒரு குழு என இயங்கி வருகிறது. கட்சி அதன் தலைவர் மு.க.ஸ்டாலின் கட்டுப்பாட்டில் இல்லை என சந்தேகிக்கின்றோம். திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் பிரிவினைவாத சக்திகள் வேகமாக செயல்பட்டு வருகிறது. கட்சியின் மூத்த தலைவர் சுப்புலட்சுமி ஜெகதீசன் திமுக வில் இருந்து விலகியுள்ளார். இது தொடரும்" என்றார்.

இதையும் படிக்க: "ஆ.ராசாவை குறிவைத்து மதவாதிகள் இனியும் தாக்குதல் தொடுத்தால்.." - சீமான் கடும் எச்சரிக்கை

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com