தாமரைப் பூ மீது நிர்வாணப் பெண்: ஃபேஸ்புக் பதிவுக்கு இந்து முன்னணி எதிர்ப்பு
தாமரைப் பூ மீது நிர்வாணப் பெண் நின்று தேசியக் கொடியை கையில் வைத்திருப்பதைப் போன்ற படத்தை ஃபேஸ்புக்கில் வெளியிடப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திருச்செந்தூர் அருகே உடன்குடியில் கடை நடத்தி வரும் குதுப்தீன் என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஃபேஸ்புக்கில் அவரது நண்பர் விவசாயிகள் பற்றி பதிவிட்ட பதிவிற்கு போட்ட கமெண்டில் இந்திய வரைபடத்தின் உள்ளே ஒரு பெண் நிர்வாணமாக தாமரை பூ மேலே நின்று கொண்டு கையில் தேசிய கொடியை வைத்திருப்பது போல் வரையப்பட்ட போட்டோவை பதிவிட்டுள்ளார்.
இது சமூக வலை தளத்தில் பரவலாக பரவியதை அடுத்து இந்து முன்னணியினர் குலசேகரபட்டிணம் காவல்நிலையத்தில் புகார் செய்தனர். புகார் குறித்து நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், குதுப்தீனை கைது செய்ய வலியுறுத்தியும் பெண்கள் உட்பட 200-க்கும் மேற்பட்ட இந்து முன்னணியினர் உடன்குடியில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். குத்புதீன் திமுக முன்னாள் அவைத்தலைவர் ரிபாதீன் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.