வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக இயக்குநர் பாரதிராஜா மீது இந்து முன்னணி அமைப்பினர் போலீஸில் புகார் அளித்துள்ளனர்.
ஆண்டாள் குறித்து வைரமுத்து தெரிவித்த கருத்து பல்வேறு விவாதங்களை எழுப்பியுள்ளது. சர்ச்சை வைரமுத்துவோடு நின்றுவிடவில்லை. வைரமுத்துவுக்கு ஆதரவாகவும், எதிராகவும் பேசுபவர்கள் சர்ச்சைகுரிய வகையில் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். முதலில் வைரமுத்துவை கடுமையான வார்த்தைகளில் ஹச்.ராஜா விமர்சித்து பேசி இதனை தொடங்கி வைத்தார்.
வைரமுத்துவை கண்டித்து நெல்லையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய நயினார் நாகேந்திரன், இந்து மதத்தை அவமதிப்பது போல் இனி யார் பேசினாலும் அவர் கொலை செய்யப்பட வேண்டும் என கூறினார். வைரமுத்து விவகாரத்தில் எங்களை ஆயுதம் எடுக்க வைக்காதீர்கள்; குற்றப் பரம்பரையாக்கி விடாதீர்கள் என நிகழ்ச்சி ஒன்றில் பாராதிராஜா பேசியிருந்தார். இதனால் வார்த்தை போர் நாளுக்கு நாள் முற்றி வருகிறது.
இது ஒருபுறம் இருக்க, மறுபுறம் வைரமுத்துவுக்கு எதிராக இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. வைரமுத்துவுக்கு எதிராக இந்து அமைப்புகள் போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர். இதனிடையே, வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக இயக்குநர் பாரதிராஜா மீது இந்து முன்னணி அமைப்பினர் வடபழனி போலீஸில் புகார் அளித்துள்ளனர்.