இளம்பெண் கொலைவழக்கில் இந்து முன்னணி நிர்வாகி குண்டர் சட்டத்தில் கைது

இளம்பெண் கொலைவழக்கில் இந்து முன்னணி நிர்வாகி குண்டர் சட்டத்தில் கைது
இளம்பெண் கொலைவழக்கில் இந்து முன்னணி நிர்வாகி குண்டர் சட்டத்தில் கைது

அரியலூர் மாவட்டம் சிறுகடம்பூரில் இளம் பெண் நந்தினியை கொலை செய்த குற்றச்சாட்டில் இந்து முன்னணி நிர்வாகி மணிகண்டன் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள சிறுகடம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நந்தினி. இவரை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இறுதியில் காணவில்லை என அவரது குடும்பத்தினர் போலீஸில் புகார் அளித்தனர். இதனையடுத்து, ஜனவரி 14-ம் தேதி கீழமாளிகை அருகே கிணற்றில் நந்தினியின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த சம்பவத்துக்கு தொடர்புடையவராக கருதப்படும் இந்து முன்னணி நிர்வாகி மணிகண்டன் என்பவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், கொலையில் தொடர்புடைய மற்றவர்களையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com