\
இந்து அறநிலையத்துறை அமைச்சர் செயல் பாபு அல்ல செயலற்ற பாபு : ஹெச்.ராஜா

இந்து அறநிலையத்துறை அமைச்சர் செயல் பாபு அல்ல செயலற்ற பாபு : ஹெச்.ராஜா

இந்து அறநிலையத்துறை அமைச்சர் செயல் பாபு அல்ல செயலற்ற பாபு : ஹெச்.ராஜா
Published on

இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு செயல் பாபு அல்ல செயலற்ற பாபு என்றும் நீட் தேர்வு மரணத்திற்கு திமுக தான் காரணம் என பாஜக மூத்த நிர்வாகி ஹெச்.ராஜா தெரிவித்தார்.

பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தேசிய செயலாளர் ஹெச்ராஜா கடந்த 2018 ம் ஆண்டு பெரியார் சிலைகள் அகற்ற வேண்டும் என வலைத்தளத்தில் பதிவிட்டது உள்ளிட்ட 5 வழக்குகள் குறித்து விசாரணைக்காக ஈரோடு நீதிமன்றத்தில் ஆஜர் ஆனார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஹெச்.ராஜா பேசும்போது, “இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, செயல் பாபு அல்ல செயலற்ற பாபு. தமிழகத்தில் இந்து அறநிலையத்துறை இந்து அறம் அழிக்கின்ற துறையாக இருக்கிறது. அமைச்சர் சேகர் பாபுவின் செயல்பாடுகள் வெற்று அறிக்கை மற்றும் இந்து கோயில்கள் அனைத்தையும் மூடவேண்டும் என்பதுபோல் இருக்கிறது. 

நீட் தேர்வு காரணமாக நடந்த இரண்டு மரணங்களுக்கு திமுக தான் காரணம். காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆளுகின்ற மாநிலங்களில் நீட் அமல்படுத்தப்பட்டது. எனவே தமிழகத்தில் நீட் தேர்விற்கு மாணவர்களை தயார் செய்ய வேண்டும் என சொல்வதுதான் பொறுப்புள்ள அரசியல்வாதி. இல்லையென்றால் பொறுப்பற்ற பிரிவினைவாதி என்றவர், தமிழகத்திற்கு ஒரு ஐபிஎஸ் அதிகாரி ஆளுநராக வருவது புதிதல்ல” என்று கூறினார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com