\
ஒகேனக்கல் ஆற்றில் பரிசல் இயக்கவும், பொதுமக்கள் குளிக்கவும் தடை

ஒகேனக்கல் ஆற்றில் பரிசல் இயக்கவும், பொதுமக்கள் குளிக்கவும் தடை

ஒகேனக்கல் ஆற்றில் பரிசல் இயக்கவும், பொதுமக்கள் குளிக்கவும் தடை
Published on: 

ஒகேனக்கல் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் மக்கள் குளிப்பதற்கும், பரிசல் சவாரி செய்வதற்கும் தடை விதிக்கப்படுள்ளது.

காவிரி நீர் பிடிப்பு பகுதியில் பெய்ந்து வரும் கனமழை காரணமாக, ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 43,000 கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் சு‌ற்றுலா பயணிகள் குளிப்பதற்கும், பரிசல் சவாரிக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தருமபுரி மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்துவரும் நிலையில் தமிழக, கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு 43,000 கன அடி அளவில் தண்ணீர் வருவது அதிகரித்துள்ளது.

பொதுமக்களின் நலன் கருதி மாவட்ட நிர்வாகம் சார்பில் அப்பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கர்நாடகாவில் உள்ள கபினி, கே.ஆர்.எஸ் அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால், நீர்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதன் காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டமும் வெகுவாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com