தமிழ்நாடு
அதிகரித்த பிளாட்ஃபார்ம் டிக்கெட் விலை - பொதுமக்கள் அதிர்ச்சி
அதிகரித்த பிளாட்ஃபார்ம் டிக்கெட் விலை - பொதுமக்கள் அதிர்ச்சி
ரயில் நிலையங்களில் பிளாட்ஃபார்ம் டிக்கெட் விலை 10 லிருந்து 20 ரூபாயாக உயர்த்தப்படும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
திருச்சி, கும்பகோணம், நாகை, திருவாரூர், வேளாங்கன்னி உள்ளிட்ட ரயில் நிலையங்களில் பிளாட்ஃபார்ம் டிக்கெட்களின் விலை 10 ரூபாயில் இருந்து 20 ரூபாயாக உயர்த்தப்படுகிறது என தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த விலை உயர்வு இன்று (ஆகஸ்ட் 1) முதல் திருச்சியில் அமல்படுத்தப்படும் என்றும், மற்ற ரயில் நிலையங்களில் வரும் 15 ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரயில் நிலையங்களில் கூடும் தேவையில்லாத கூட்டத்தைக் கட்டுப்படுத்தவே இந்த விலை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.