\
சாலையில் பள்ளம்: தனியார் டெலிகாம் நிறுவனத்தின் மீது நெடுஞ்சாலைத் துறை புகார்

சாலையில் பள்ளம்: தனியார் டெலிகாம் நிறுவனத்தின் மீது நெடுஞ்சாலைத் துறை புகார்

சாலையில் பள்ளம்: தனியார் டெலிகாம் நிறுவனத்தின் மீது நெடுஞ்சாலைத் துறை புகார்
Published on

அனுமதி இல்லமால் சாலையில் பள்ளம் தோண்டியதாக தனியார் டெலிகாம் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்ககோரி நெடுஞ்சாலை துறை சார்பில் கிண்டி காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

கடந்த இரு தினங்களுக்கு முன்பு கிண்டி சின்னமலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் சாலையில் இருந்த பள்ளத்தில் நிலைதடுமாறி மாநகர பேருந்து சக்கரத்தில் சிக்கி பரிதபமாக உயிரிழந்தார். இது குறித்து நெடுஞ்சாலை துறைக்கு விளக்கம் கேட்டு கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் நோட்டீஸ் அனுப்பி இருந்தனர்.

இந்நிலையில் தனியார் டெலிகாம் நிறுவனம் கடந்த மாதம் அக்டோபர் மாதம் 5ஆம் தேதி வரை பள்ளம் தோண்டி கேபிள் பதிக்க அனுமதி வாங்கிவிட்டு அந்த அனுமதி காலம் முடிந்த பின்பும், சாலையில் பள்ளம் தோண்டியதாகவும், அந்த பள்ளத்தை சரியாக திரும்ப சரிசெய்யவில்லை என தனியார் டெலிகாம் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நெடுஞ்சாலைத் துறை உதவிப் பொறியாளர் ஹரிபாபு என்பவர் கிண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகார் தொடர்பாக காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com