திண்டுக்கல் புதிய தலைமுறை
தமிழ்நாடு
'நம்ம ரூட்டே தனி''.. சாலையோர மைல் கல்லில் ஆயுதபூஜையை கொண்டாடிய நெடுஞ்சாலைத்துறையினர்!
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே சாலையோர மைல் கல்லில் ஆயுதபூஜையை கொண்டாடிய நெடுஞ்சாலைத்துறையினர்.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே நெடுஞ்சாலைத்துறையினர் விநோத முறையில் சாலையோர மைல் கல்லுக்கு பூஜை செய்து ஆயுத பூஜையை கொண்டாடினர். கோவிலூர் செல்லும் சாலையின் ஓரமாக உள்ள மைல் கல்லிற்கு மாலை அணிவித்து, வாழைமரத் தோரணங்கள் கட்டி அலங்காரம் செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து கற்பூர தீபம் காட்டி, பொரி, கடலை மற்றும் பழங்களை வைத்து படையல் போட்டு வழிபாடு செய்தனர்.