இபிஎஸ்-க்கு செக் வைக்க நினைத்த ஆர்.எஸ்.பாரதி; முடித்துவைத்த உயர்நீதிமன்றம்- தீர்ப்பின் முழு விபரம்!

எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான புகாரில் லஞ்ச ஒழிப்பு துறைக்கு உத்தரவிடக் ஆர்.எஸ்.பாரதி தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கடந்த 2018ஆம் ஆண்டு ஜூன் மாதம் 18ஆம் தேதி அப்போதைய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளித்தார். இந்த மனு மீது தமிழக லஞ்ச ஒழிப்புதுறை நடவடிக்கை எடுக்காததால், தனது புகாரில் வழக்கு பதிந்து விசாரணை செய்து முதல்வராக இருந்த பழனிசாமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆர்.எஸ்.பாரதி 2018ஆம் ஆண்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு, நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு கடந்த வாரம் விசாரணை நடைபெற்று தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், ’எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஆர்.எஸ்.பாரதி புகாரில் லஞ்ச ஒழிப்புத் துறையால் 2018ல் நடத்தப்பட்ட ஆரம்பகட்ட விசாரணையில் குறைகான முடியாது என்றும், புதிய விசாரணைக்கு நடத்துவதற்கு எந்த காரணமுமில்லை எனவும், ஆட்சி மாற்றம் காரணமாக மட்டுமே உத்தரவிடப்பட்டு உள்ளதாக கூறி, ஆர்.எஸ்.பாரதி மனுவை தள்ளுபடி செய்து இன்று நீதிபதி உத்தரவிட்டார்.

இருந்தபோதிலும், புகார்தாரர் சம்பந்தப்பட்ட மேஜிஸ்திரேட் சென்று நிவாரணம் பெறலாம் எனவும் உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com