தமிழ்நாடு
மெரினாவில் கடைகள் ஒதுக்கீடு விவகாரம்: மாநகராட்சிக்கு நீதிமன்றம் எச்சரிக்கை
மெரினாவில் கடைகள் ஒதுக்கீடு விவகாரம்: மாநகராட்சிக்கு நீதிமன்றம் எச்சரிக்கை
மெரினாவில் கடைகள் ஒதுக்கீட்டில் முறைகேடுகள் நடந்தால் உயர்நீதிமன்றம் அதில் தலையிடும் என நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தள்ளுவண்டி கடைகளை முறையாக ஒதுக்கீடு செய்ய கடை வைத்திருந்தவர்கள் ஏற்கெனவே முறையீடு செய்திருந்தனர். கடை ஒதுக்கீடு செய்வதில் முறையான விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் “மெரினாவில் கடை வைத்திருந்தவர்களுக்கு கடைகளை ஒதுக்குவதில் மாநகராட்சி விதிமுறைகளை கடைபிடிக்கும் என நம்புகிறோம். விதிகளை மீறினால் நீதிமன்றம் இதில் தலையிடும்” என எச்சரித்துள்ளனர்.
புதிய கடைகளுக்கான டெண்டர் முடிவு செய்வது குறித்து நாளை பதிலளிப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.