உயர்நீதிமன்ற ஊழியர்களின் ஊதிய உயர்வு பரிந்துரை நிராகரிப்பு
உச்சநீதிமன்ற ஊழியர்களுக்கு இணையாக சென்னை உயர்நீதிமன்ற ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்த வேண்டுமென்ற பரிந்துரையை தமிழக அரசு நிராகரித்து விட்டது.
முன்னாள் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், உச்சநீதிமன்ற மற்றும் டெல்லி உயர் நீதிமன்ற ஊழியர்களுக்கு இணையாக சென்னை உயர் நீதிமன்ற ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்த வேண்டுமென தமிழக அரசுக்கு பரிந்துரை செய்திருந்தார். இதனை அமலுக்கு கொண்டு வரக் கோரி ஊழியர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, பரிந்துரையை நிராகரிப்பதாக அரசு கூறியது. ஒரு துறையில் இருக்கும் பணியாளர்களுக்கு ஊதியத்தை உயர்த்தினால் மற்ற துறைகளுக்கும் அதைப் பின்பற்ற நேரிடும் எனக் கூறியுள்ள தமிழக அரசு, மற்ற மாநில ஊழியர்களின் சம்பளத்தோடு தமிழக ஊழியர்களின் சம்பளத்தை ஒப்பிடுவது முறையல்ல என்றும் விளக்கமளித்துள்ளது.