தமிழ்நாடு
வழக்கறிஞர்கள் சங்கத் தேர்தலில் பணமும், மதுவும் பாய்கிறது - உயர் நீதிமன்றம் வேதனை
வழக்கறிஞர்கள் சங்கத் தேர்தலில் பணமும், மதுவும் பாய்கிறது - உயர் நீதிமன்றம் வேதனை
வழக்கறிஞர்கள் சங்கத் தேர்தலில் பணமும், மதுவும் பாய்ந்தோடுவதாக சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்திருக்கிறது. சட்டப்பேரவை தேர்தலுக்கும் வழக்கறிஞர்கள் சங்க தேர்தலுக்கும் வித்தியாசம் இல்லை என நீதிபதி கிருபாகரன் அமர்வு கருத்து கூறியிருக்கிறது.
மதுவுக்காக தங்களை விற்கக்கூடிய வழக்கறிஞர்கள்கூட இருப்பதாகவும், வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் கட்டப் பஞ்சாயத்தில் ஈடுபடுவதாகவும் நீதித்துறை அதிகாரிகளை மிரட்டுவதாகவும் நீதிபதி கருத்து கூறியிருக்கிறார்.
மேலும், சேலம் வழக்கறிஞர்கள் சங்க தேர்தலை ஏப்ரலுக்குள் நடத்தவும் வேண்டுமென உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த தேர்தலை நடத்த ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதியைநியமித்துள்ளது.