தனியார் மருத்துவமனை சிகிச்சை கட்டணத்தை அரசு ஏற்குமா? - உயரநீதிமன்றம்
கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகள் வசூலிக்கும் கட்டணத்தை மத்திய மாநில அரசுகள் ஏற்க முடியுமா என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு படுக்கை வசதிகள் கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு அண்மையில் விஸ்வரூபம் எடுத்தது. இதனிடையே தனியார் மருத்துவமனைகள் கொரோனா சிகிச்சைக்கு எவ்வளவு கட்டணம் வசூலிக்கலாம் என்பது குறித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது.
இந்நிலையில் தனியார் மருத்துவமனை வசூலிக்கும் சிகிச்சை கட்டணங்களை மத்திய மாநில அரசுகள் ஏற்க முடியுமா என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
அரசு மருத்துவமனையில் காலியாக உள்ள படுக்கை விவரம் பற்றி தெரிவித்தால் ஏன் தனியாரை அணுக போகிறார்கள்? தனியார் மருத்துவமனையில் கூடுதல் கட்டணம் வசூல் தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என்பது குறித்து மத்திய மாநில அரசுகள் ஜூன் 16-ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.