அதிவேகமாக வாகனம் ஓட்டினால் உடனடி தண்டனை?

அதிவேகமாக வாகனம் ஓட்டினால் உடனடி தண்டனை?

அதிவேகமாக வாகனம் ஓட்டினால் உடனடி தண்டனை?
Published on

அதிவேகமாக வாகனம் ஓட்டுபவர்களுக்கு உடனடியாக தண்டனை விதிக்கும் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 8-ம் தேதி தாம்பரம் அடுத்த கேம்ப் சாலையில், அதிவேகமாக சென்ற கார், இருசக்கர வாகனங்கள் மீது மோதியதில் கல்லூரி மாணவர்கள் 4 பேர் படுகாயம் அடைந்தனர். இது தொடர்பான வழக்கில் கடந்த இரண்டு ஆண்டுகளில் தமிழகத்தில் நடந்த விபத்துகள், பதியப்பட்ட வழக்குகள் குறித்தும் அரசுத்தரப்பில் அறிக்கை அளிக்கப்பட்டது. 

அதில், அதிவேகமாக வாகனம் ஓட்டுபவர்களை கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணித்து, உடனுக்குடன் தண்டனை வழங்கும் வகையிலான திட்டத்தை, மும்பை ஐதராபாத் போன்று தமிழகத்திலும் அமல்படுத்த வேண்டும் என கூறப்பட்டு இருந்தது. விபத்துகளில் பாதிக்கப்படுவோருக்கு, மோட்டார் விபத்து சமரச தீர்வு மையம் மூலம் விரைந்து இழப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட பரிந்துரைகளும் அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

அறிக்கையை படித்த நீதிபதி, அதிவேகமாக வாகனம் ஓட்டுபவர்களுக்கு உடனடியாக தண்டிக்கும் திட்டத்தை செயல்படுத்துவது குறித்தும், இப்பரிந்துரைகளை அமல்படுத்துவது குறித்தும் ஜூலை ஒன்றாம் தேதிக்குள் விளக்கம் அளிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com