\
ஸ்கூல் பேக், லஞ்ச் பேக் ஆகியவை வாங்கும்படி பள்ளிகள் வற்புறுத்தக்கூடாது : உயர்நீதிமன்றம் உத்தரவு

ஸ்கூல் பேக், லஞ்ச் பேக் ஆகியவை வாங்கும்படி பள்ளிகள் வற்புறுத்தக்கூடாது : உயர்நீதிமன்றம் உத்தரவு

ஸ்கூல் பேக், லஞ்ச் பேக் ஆகியவை வாங்கும்படி பள்ளிகள் வற்புறுத்தக்கூடாது : உயர்நீதிமன்றம் உத்தரவு
Published on

ஸ்கூல் பேக், லஞ்ச் பேக் போன்ற பொருட்களை வாங்கும்படி பெற்றோரை பள்ளி நிர்வாகங்கள் வற்புறுத்த கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவையில் உள்ள மாதா அமிர்தானந்தமயி அறக்கட்டளைக்கு சொந்தமான பள்ளி நிர்வாகம்,பாட புத்தகங்களுக்கு 5000 ரூபாயும், சீருடைகள், காலணிகள், புத்தக பை, மதிய உணவு எடுத்துச் செல்வதற்கான பைகளுக்கு 5000 ரூபாயும் செலுத்தக்கூறி சுற்றறிக்கை வெளியிட்டது. இதை எதிர்த்து மாணவர்களின் பெற்றோர் ஹேமலதா உள்ளிட்ட இருவர் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு நீதிபதி கார்த்திகேயன் முன் விசாரணைக்கு வந்தபோது, தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் பரிந்துரைத்த 450 ரூபாய் விலை கொண்ட புத்தகங்களுக்கு பதிலாக, 5,000 ரூபாய் விலையுடைய ஆக்ஸ்போர்டு மற்றும் கேம்பிரிட்ஜ் புத்தகங்களை பள்ளி நிர்வாகங்கள் வழங்குவதால், நடுத்தர பெற்றோர் பாதிக்கப்பட்டுள்ளதாக மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. இந்த வாதத்தை கேட்ட நீதிபதி, மாணவர்களுக்கு தேவையான பாட புத்தகங்கள், சீருடைகள், காலணிகளை விற்கலாம்.ஆனால், பிற பொருட்களை வாங்கும்படி பெற்றோரை நிர்பந்திக்க கூடாது என உத்தரவிட்டார். பின்னர், இந்த வழக்கின் விசாரணையை ஜூன் மாதம் 10ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com