சுபஸ்ரீ வழக்கை காவல் ஆணையர் கண்காணிக்க நீதிமன்றம் உத்தரவு
பேனர் விழுந்து சுபஸ்ரீ இறந்த வழக்கு தொடர்பாக காவல் ஆணையர் கண்காணித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை பள்ளிக்கரணை அருகே சில தினங்களுக்கு முன்பு சாலையில் வைக்கப்பட்ட பேனர் விழுந்ததில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த சுபஸ்ரீ என்ற இளம்பெண் நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் பின்னால் வந்து கொண்டிருந்த தண்ணீர் லாரி சுபஸ்ரீயின் மீது ஏறியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் பேனர் விழுந்து சுபஸ்ரீ இறந்த வழக்கு தொடர்பாக காவல் ஆணையர் கண்காணித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பேனர் விவகாரத்தில் ஜெயகோபாலை இதுவரை கைது செய்யாததற்கு நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். ஜெயகோபாலை கைது செய்ய எடுத்த நடவடிக்கை குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை அக்டோபர் 15 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.