காஞ்சி காமகோடி பீடத்துக்கு சொந்தமான யானைகளை மறுவாழ்வு மையத்துக்கு அனுப்ப உத்தரவு

காஞ்சி காமகோடி பீடத்துக்கு சொந்தமான யானைகளை மறுவாழ்வு மையத்துக்கு அனுப்ப உத்தரவு

காஞ்சி காமகோடி பீடத்துக்கு சொந்தமான யானைகளை மறுவாழ்வு மையத்துக்கு அனுப்ப உத்தரவு
Published on

தனியாரின் கட்டுப்பாட்டில் உள்ள காஞ்சி காமகோடி பீடத்துக்கு சொந்தமான 3 பெண் யானைகளை திருச்சியில் உள்ள யானைகள் மறுவாழ்வு மையத்திற்கு அனுப்ப சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காஞ்சி காமகோடி பீடத்துக்கு சொந்தமான சந்தியா, ஜெயந்தி, இந்துமதி ஆகிய யானைகளை முறையாக பரமாரிக்கவில்லை என கூறியும், சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என மிரட்டியும், பவுண்டேஷன் இந்தியா என்ற அமைப்பும், வனவிலங்குகள் மீட்பு மற்றும் மறுவாழ்வு அறக்கட்டளை என்ற அமைப்பும் கடந்த 2016ம் ஆண்டு அந்த யானைகளை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டது.

தற்போது, விழுப்புரம் மாவட்டம் குறும்பரம் கிராமத்தில் வனத்துறை அனுமதி இல்லாமல் சட்டவிரோத யானைகள் முகாமை நடத்தி வருவதாகவும், யானைகள் காட்டி வெளிநாட்டு தொண்டு நிறுவனங்களிடம் பல லட்சம் ரூபாய் நன்கொடை பெறுவதாகவும் கூறி, இந்த முகாமை மூட உத்தரவிடக் கோரி விலங்கு நல ஆர்வலர் முரளிதரன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாரயணன், சேசஷாயி அடங்கிய அமர்வு, 4 வாரங்களில் இந்த 3 யானைகளையும்  மீட்டு திருச்சி எம் ஆர் பாளையத்தில் உள்ள யானை மீட்பு மற்றும் மறுவாழ்வு மையத்தில் சேர்க்க வேண்டும் என உத்தரவிட்டது.

மேலும் இந்த மையத்தில், யானைகளுக்கு உரிய மருத்துவ வசதி மற்றும் பராமரிப்பு நடவடிக்கைகளை உறுதி செய்ய வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள் யானைகளை இடமாற்றம் செய்தது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யவும் அரசுக்கு அறிவுறுத்தி வழக்கை முடித்து வைத்தனர்.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com