நாளைக்குள் ஓய்வூதிய நிலுவைத்தொகை வழங்க உத்தரவு

நாளைக்குள் ஓய்வூதிய நிலுவைத்தொகை வழங்க உத்தரவு
நாளைக்குள் ஓய்வூதிய நிலுவைத்தொகை வழங்க உத்தரவு

போக்குவரத்து ஓய்வூதியதாரர்களின் இரண்டாம் தவணை நிலுவைத் தொகையான 379 கோடி ரூபாயில் 204 கோடி ரூபாய்க்கான அரசாணையை பிறப்பித்து‌ நாளைக்குள் வழங்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தின்போது மாயாண்டி சேர்வை என்பவரின் கடிதத்தின்‌ அடிப்படையில் தொடரப்பட்ட இந்த வழக்கில், இரண்டாவது த‌வணைத்தொகையான 379 கோடி ரூபாயை டிசம்பர் 15க்குள் வழங்க நீதிபதிகள் மணிக்குமார், ஆர். சுரேஷ்குமார் ஆகியோர் கொண்ட அமர்வு ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. இதற்கு பதிலளித்த அரசு தரப்பு, கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள போதும் ஓய்வூதியர்களின் நலன் கருதி 379 கோடி ரூபாயில் 175 கோடி ரூபாயை மட்டும் தற்போது ஒதுக்கியுள்ளதா‌க கடிதம் மூலம் தெரிவிக்கப்பட்டது.

போக்குவரத்துத்துறை அமைச்சர் ஊரில் இல்லாத காரணத்தால் மீதி 204 கோடி ரூபாய்க்கு அரசாணை பிறப்பிப்பதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளதாக அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இரண்டாம் தவணை நிலுவைத் தொகையான 379 கோடி ரூபாயில் 204 கோடி ரூபாய்க்கான அரசாணையை பிறப்பித்து‌ நாளைக்குள் வழங்க தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து ஜனவரி 15ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டிய 3 ஆவது தவணை பற்றி ஜனவரி 3ல் விளக்கம் அளிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com