தமிழ்நாடு
குட்கா விவகாரத்தில் சிபிஐ விசாரணை அவசியம்: உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
குட்கா விவகாரத்தில் சிபிஐ விசாரணை அவசியம்: உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
குட்கா அனுமதிக்கு லஞ்ச பெற்ற விவகாரத்தில் சிபிஐ விசாரணை அவசியம் என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
குட்கா விற்பனைக்கு அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழக டிஜிபி ராஜேந்திரன் ஆகியோர் லஞ்சம் பெற்றதாகவும் அதை சிபிஐ விசாரிக்க கோரியும் திமுகவின் அன்பழகன் சார்பில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, இந்தக் கருத்தை தெரிவித்துள்ளது. காவல்துறை உயரதிகாரிகள் மீது புகார் எழுந்திருப்பது முக்கியமான பிரச்னை எனவும் சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. மேலும் இந்த வழக்கு குறித்து தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டுள்ளது.