ஆதிச்சநல்லூரில் அகழாய்வு உண்டா? இல்லையா? தொல்லியல் துறையின் பதில்!

ஆதிச்சநல்லூரில் அகழாய்வு உண்டா? இல்லையா? தொல்லியல் துறையின் பதில்!
ஆதிச்சநல்லூரில் அகழாய்வு உண்டா? இல்லையா? தொல்லியல் துறையின் பதில்!

ஆதிச்சநல்லூரில் மீண்டும் அகழாய்வு பணியை மேற்கொள்ளும் திட்டம் தற்போதைக்கு இல்லை என மத்திய தொல்லியல் துறை  தெரிவித்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூரைச் சேர்ந்த எழுத்தாளர் காமராஜ், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனுவைத் தாக்கல் செய்திருந்தார். அதில், “தூத்துக்குடி மாவட்டம் தாமிரபரணி நதிக்கரையில் அமைந்திருக்கும் வரலாற்று சிறப்புமிக்க இடம் ஆதிச்சநல்லூர். இங்கு அழகாய்வு பணி 2004 பிப்ரவரியில் தொடங்கப்பட்டது.

இந்த ஆய்வில் 114 ஏக்கர் பரப்பளவில் இடுகாடு அமைந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஏராளமான பழங்கால பொருட்களும் கண்டெடுக்கப்பட்டது. ஆதிச்சநல்லூரில் இதுவரை 4 கட்ட அகழாய்வு நடைபெற்றுள்ளது. இந்த அகழாய்வு குறித்த அறிக்கை இதுவரை வெளியிடப்படவில்லை. இங்கு எடுக்கப்பட்ட பழங்கால பொருட்கள் சென்னையிலும், வெளிநாடுகளிலும் உள்ளன. எனவே ஆதிச்சநல்லூரில் மீண்டும் அகழாய்வு நடத்தவும், ஆதிச்சநல்லூர் அகழாய்வு அறிக்கையை வெளியிடவும், அந்த அறிக்கையின் அடிப்படையில் ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமைத்து பழங்கால பொருட்களை காட்சிப்படுத்தவும் உத்தரவிட வேண்டும்" என கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் நீதிபதிகள் கிருபாகரன், தாரணி அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய தொல்லியல் துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், ஆதிச்சநல்லூரில் மீண்டும் அகழாய்வு பணியை மேற்கொள்ளும் திட்டம் தற்போதைக்கு இல்லை என்றும், அது கொள்கை ரீதியான முடிவு என்றும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், ஆதிச்சநல்லூரில் மீண்டும் அகழாய்வு செய்ய இயலுமா? இயலாதா? என்பது குறித்து மத்திய தொல்லியல்துறை தலைமை இயக்குநர் பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். தவறினால் நேரில் ஆஜராக உத்தரவிடப்படும் எனவும் தெரிவித்தனர். அத்துடன் பாரம்பரியத்தின் பழமையை அறிந்து கொள்ளும் வகையில், மாநில அரசு மறு அகழ்வாராய்ச்சியை மேற்கொள்ள வேண்டும் எனவும், இதுதொடர்பாக தமிழக அரசும் விளக்க வேண்டும் எனக் கூறியு வழக்கை மார்ச் 6 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com