ஜெயலலிதா பிறந்த நாளுக்கு பேனர் - கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்

ஜெயலலிதா பிறந்த நாளுக்கு பேனர் - கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்

ஜெயலலிதா பிறந்த நாளுக்கு பேனர் - கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்
Published on

ஜெயலலிதாவின் பிறந்த நாளை ஒட்டி பேனர்கள் வைக்க அனுமதி கோரி அதிமுக முன்னாள் எம்.பி பாலகங்கா தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 70-வது பிறந்தநாள் வரும் பிப்ரவரி 24-ம் தேதி வருகிறது. ஜெயலலிதாவின் பிறந்த நாளை அதிமுக சார்பில் கோலாகலமாகக் கொண்டாட முடிவு செய்துள்ளனர். இதற்காக சென்னையில் பேனர்கள் வைக்க அனுமதி கோரி அதிமுகவின் சார்பில் அதிமுக வட சென்னை தெற்கு மாவட்டச் செயலாளர் பாலகங்கா முறையீட்டு மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.

இதனிடையே சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக அரசியல் கட்சியினர் பேனர் வைப்பதற்கு தடைவிதித்தனர்.

இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதிகள் எம்.சத்யநாராயணன் மற்றும் எம்.நிர்மல்குமார் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, பாலகங்கா தாக்கல் செய்த மனுவையும் விசாரித்தனர். 

அப்போது பாலகங்கா கோரிக்கை மனுவை நிராகரித்த நீதிபதிகள், அதிமுக பேனர்கள் எந்தெந்த இடங்களில் இருக்கிறது எனப் பட்டியல் தரட்டுமா எனக் கேள்வி எழுப்பினர். அதிமுக வைக்கும் பேனர்களுக்கு எதிராக அரசு எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என்றும் நீதிமன்ற உத்தரவின் மாண்பு காக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்தனர்.

பாலகங்காவின் மனு குறித்து தமிழக அரசு மற்றும் பிற அரசியல் கட்சிகள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை மார்ச் 13ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com