யாருக்கு அதிகாரம்? கிரண்பேடிக்கு எதிரான உத்தரவு ரத்து
புதுச்சேரி யூனியன் பிரதேச அரசின் அன்றாட பணிகளில் தலையிட துணை நிலை ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்ற தனி நீதிபதி உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது.
அரசின் அன்றாட பணிகளை கண்காணிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட துணை நிலை ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது என கிரண்பேடி சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, புதுச்சேரி யூனியன் பிரதேச அரசின் அன்றாட பணிகளில் தலையிட துணை நிலை ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என உத்தரவிட்டிருந்தார்.
தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து மத்திய அரசு, துணைநிலை ஆளுநர் தரப்பிலும் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஏ.பி.சாஹி, நீதிபதி சுப்ரமணியம் பிரசாத் அமர்வு, கூட்டாட்சி தத்துவத்தின்படி துணைநிலை ஆளுநரும், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசும் ஒருங்கிணைந்து செயல்பட அறிவுறுத்தியுள்ளது. அத்துடன் அரசின் அன்றாட பணிகளில் தலையிட துணை நிலை ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்ற தனி நீதிபதி உத்தரவும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மேலும், கருத்து வேறுபாடு தொடர்பாக துணைநிலை ஆளுநர் அனுப்பும் பரிந்துரைகள் மீது விரைந்து முடிவெடுக்க மத்திய அரசுக்கு தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது.