\
ஆவின் தலைவர் பதவி - ஓபிஎஸ் சகோதரருக்கு நீதிமன்றம்  நோட்டீஸ்

ஆவின் தலைவர் பதவி - ஓபிஎஸ் சகோதரருக்கு நீதிமன்றம் நோட்டீஸ்

ஆவின் தலைவர் பதவி - ஓபிஎஸ் சகோதரருக்கு நீதிமன்றம் நோட்டீஸ்
Published on

பால்‌வள மேம்பாட்டுத்துறை துணைப் பதிவாளர், ஓபிஎஸின் சகோதரரும், மதுரை ஆவின் தலைவருமான ஓ.ராஜா ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. 

தேனி மாவட்டம் உப்புக்கோட்டை அருகேயுள்ள ரோஸி நகர் பால் உற்பத்தியாளர் சங்கத்தின் செயலாளர் என்ற அடிப்படையில், ஆவின் தலைவர் பதவிக்கு ஓ.ராஜா போட்டியிட்டு தேர்வு செய்யப்பட்டார். ஆனால், ரோஸி நகர் பால் உற்பத்தியாளர் சங்கம் தவறான ஆவணங்களை சமர்ப்பித்து தொடங்கப்பட்டதாக தேனியைச் சேர்ந்த அமாவாசை என்பவர் வழக்குத்தொடர்ந்தார். 

இது தொடர்பாக மதுரை பால்வள மேம்பாட்டுத்துறை துணை பதிவாளருக்கு பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், அதனால் ரோஸி நகர் சங்கத்தின் பதிவை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.‌

இந்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையில், பால்வள மேம்பாட்டுத்துறை துணை பதிவாளர், மதுரை ஆவின் தலைவர் ஓ.ராஜா ஆகியோருக்கு நோட்டிஸ் அனுப்ப நீதிமன்றம் ஆணையிடப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com