செவிலியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கத் தடை

செவிலியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கத் தடை

செவிலியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கத் தடை
Published on

தமிழ்நாட்டில் செவிலியர் பணிக்கு நிர்ணயிக்கப்பட்ட தகுதி மதிப்பெண்ணை விட குறைவான மதிப்பெண் பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்க சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

மாநிலத்தில் காலியாக உள்ள 2 ஆயிரத்து 345 செவிலியர் பணியிடங்களுக்கான தேர்வு கடந்த ஜூலை 23ஆம் தேதி நடைபெற்றது. இத்தேர்வில் தகுதி மதிப்பெண்களாக, பொதுப்பிரிவினர், பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினர் 64.50 மதிப்பெண்களும், எஸ்சி, எஸ்டி வகுப்பினர் முறையே 64 மற்றும் 54 மதிப்பெண்கள் பெற வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டது. 

ஆனால், தகுதி மதிப்பெண்ணை விட குறைவாக பெற்ற 56 பேர் தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டதால், அவர்களின் பணி நியமன உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரி, சென்னையைச் சேர்ந்த செவிலி பட்டதாரி திவ்யபாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தேர்வு நடைமுறையில் வெளிப்படைத்தன்மை இல்லை என்பதால், மீண்டும் தேர்வு நடத்த உத்தரவிட வேண்டும் என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. இதையடுத்து, சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைப்பு விடுத்து பிறப்பிக்கப்பட்ட அறிவிப்பாணைக்கு தடை விதித்த நீதிபதி, தகுதி மதிப்பெண்களுக்கும் குறைவான மதிப்பெண் பெற்றவர்களுக்கு பணிநியமனம் வழங்கவும் தடை விதித்து உத்தரவிட்டார். மேலும் மனுவுக்கு வரும் 14ஆம் தேதிக்குள் பதிலளிக்க மருத்துவப் பணிகள் தேர்வாணையத்துக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com