தமிழ்நாடு
அமெரிக்க அதிபர் தேர்தல் பற்றியா நளினியும் முருகனும் பேசப்போகிறார்கள்?: நீதிமன்றம் கேள்வி
அமெரிக்க அதிபர் தேர்தல் பற்றியா நளினியும் முருகனும் பேசப்போகிறார்கள்?: நீதிமன்றம் கேள்வி
அமெரிக்க அதிபர் தேர்தல் பற்றியா நளினியும் முருகனும் பேசப்போகிறார்கள் என உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள நளினியும் முருகனும் உறவினர்களிடம் காணொலி மூலம் பேச அனுமதி கோரிய வழக்கு சென்னை உயநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு இன்று நீதிபதி கிருபாகரன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது நளினியையும் முருகனையும் பேச அனுமதித்தால், பன்னோக்கு விசாரணை முகமை விசாரணைக்கு இடையூராக அமையும் என தமிழக அரசு தெரிவித்தது.
இதையடுத்து அமெரிக்க அதிபர் தேர்தல் பற்றியா நளினியும் முருகனும் பேசப்போகிறார்கள்? குடும்பத்தினரிடம் நளியும் முருகனும் பேசுவதில் என்ன பாதுகாப்பு குறைபாடு ஏற்பட போகிறது? என கிருபாகரன் தலைமையிலான அமர்வு கேள்வி எழுப்பியது.