முருகனுக்கும் நளினிக்கும் வீடியோகால் பேச அனுமதிப்பதில் என்ன பிரச்னை?: உயர்நீதிமன்றம்

முருகனுக்கும் நளினிக்கும் வீடியோகால் பேச அனுமதிப்பதில் என்ன பிரச்னை?: உயர்நீதிமன்றம்
முருகனுக்கும் நளினிக்கும் வீடியோகால் பேச அனுமதிப்பதில் என்ன பிரச்னை?: உயர்நீதிமன்றம்

தாயார் மற்றும் சகோதரியுடன் வாட்ஸ்அப் வீடியோகால் மூலம் பேச முருகனுக்கும் நளினிக்கும் அனுமதி அளிப்பதில் என்ன தவறு என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதியாக உள்ள நளினி மற்றும் முருகன் சார்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினியின் தாயார் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அதில், இலங்கையில் உள்ள முருகனின் தாயார் சோமனியம்மாளிடம் தினமும் 10 நிமிடங்கள் வாட்ஸ்அப் வீடியோகால் பேச முருகனுக்கும், நளினிக்கும் அனுமதி அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தார்.மேலும், லண்டனில் உள்ள முருகனின் தங்கையுடனும் பேச அனுமதிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டிருந்தார்.

ஏற்கெனவே முருகனின் தந்தை இறந்த போது வீடியோகால் மூலம் அவரது முகத்தை பார்க்கக் கூட முருகனுக்கு தமிழக அரசு அனுமதி மறுத்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், பி.டி.ஆஷா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மனுவிற்கு பதிலளிக்க ஒரு வார கால அவகாசம் வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

அதற்கு நீதிபதிகள், வாட்ஸ் அப் வீடியோகால் பேசுவதற்கு அனுமதி அளிப்பதில் என்ன பிரச்னை உள்ளது என்று கேள்வி எழுப்பினர். பின்னர் மனு தொடர்பாக நாளை மறுதினம் பதிலளிக்க அரசுத்தரப்புக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com