\
பயங்கரவாதிகளின் நடமாட்டமா ? உச்சகட்ட பாதுகாப்பில் கோவை

பயங்கரவாதிகளின் நடமாட்டமா ? உச்சகட்ட பாதுகாப்பில் கோவை

பயங்கரவாதிகளின் நடமாட்டமா ? உச்சகட்ட பாதுகாப்பில் கோவை
Published on

பயங்கரவாத தாக்குதல் நடைபெற வாய்ப்பு என்ற உளவுத்துறையின் தகவலை தொடர்ந்து கோவை மாவட்டத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

உளவுத்துறை நேற்று தமிழ்நாடு காவல்துறைக்கு ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளது. அதில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பை சேர்ந்த 6 பயங்கரவாதிகள் தமிழ்நாட்டிற்குள் ஊடுருவியுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் அவர்கள் 6 பேரும் கோவையில் தங்கியிருப்பதாக உளவுத்துறை எச்சரித்ததாக தெரிகிறது. இவர்களில் ஒருவர் பாகிஸ்தானை சேர்ந்த இலியாஸ் அன்வர் என்றும் மற்றவர்கள் இலங்கை நாட்டை சேர்ந்த இஸ்லாமியிர்கள் என்றும் உளவுத்துறை தகவல் அளித்துள்ளது. 

மேலும் இவர்கள் அனைவரும் இந்துக்களை போன்று உருமாறி கோவையில் உலாவி வருவதாக அதிர்ச்சி தரும் தகவலை காவல்துறைக்கு கொடுத்தது. இதனையடுத்து கோவையிலுள்ள ரயில் நிலையம், விமான நிலையம் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் காவல்துறை பாதுகாப்பை அதிகரித்துள்ளது. மேலும் கோவை நகர் முழுவதும்  காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com