தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பலத்த காற்றுடன் மழை

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பலத்த காற்றுடன் மழை

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பலத்த காற்றுடன் மழை
Published on


தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது.


தமிழகத்தில் உம்பன் புயல் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்குத் தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், மதுரை, பெரம்பலூர், திருநெல்வேலி, தூத்துக்குடி தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வானிலை மையம் இன்று மாலை அறிவித்தது.

அதன்படி மதுரை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. பலத்த காற்று வீசியதால் மதுரையில் சில இடங்களில் மரங்கள் சரிந்து விழுந்துள்ளன. அது தொடர்பான வீடியோ பதிவுகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வருகின்றன.மதுரை மட்டுமல்லாமல் திருச்சி, புதுக்கோட்டை, கரூர், தஞ்சை அறந்தாங்கி உள்ளிட்ட இடங்களிலும் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது.இதனால் சில இடங்களில் மின் வெட்டு ஏற்பட்டுள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com