\
செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜிPt web

தேர்தலில் வாக்களிக்காத செந்தில் பாலாஜி.. என்ன காரணம்..?

கோவை தெற்கு தொகுதி திமுக வேட்பாளரான செந்தில் பாலாஜி நேற்று தேர்தலில் வாக்களிக்கவில்லை. அவர் கரூர் செல்லாமல் கோவையிலேயே இருந்துள்ளார்.
Published on
Summary

கரூர் எம்எல்ஏவாக இருந்தும், 2026 சட்டமன்றத் தேர்தலில் தன் தொகுதியில் செந்தில் பாலாஜி வாக்களிக்காதது சர்ச்சையாகியுள்ளது. கோவையில் பல்வேறு தொகுதிகளில் வாக்குப்பதிவை கண்காணித்ததால், வாக்களிக்க நேரமில்லாததாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் நடந்த தேர்தல்களில் கரூர் மற்றும் அரவக்குறிச்சி தொகுதிகளில் மட்டுமே போட்டியிட்டு வெற்றி பெற்று வந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, இந்தத் தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டார்.

கோவை மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தேர்தல்களில் திமுக தொடர் தோல்வியைச் சந்தித்து வரும் நிலையில் திமுக தலைமை விருப்பத்தின்படி, கோவையில் போட்டியிடுவதாக அவர் கூறியிருந்தார்.

செந்தில் பாலாஜி
1971-ல் 184 இடங்கள் வெற்றி to 1991-ல் 2 இடங்களில் மட்டுமே வெற்றி.. திமுக சட்டமன்ற தேர்தல் வரலாறு!

என்ன காரணம்..?

இந்தசூழலில் தான் கரூர் மாவட்ட செயலரும் கரூர் தொகுதி எம்எல்ஏவுமான செந்தில் பாலாஜி (ஏப்ரல் 23) நேற்று நடந்த 2026 சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்காதது பேசுபொருளாகி உள்ளது. சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் களமிறங்கியுள்ள அவர், காலையிலேயே கரூர் தொகுதியில் தனது வாக்கை பதிவு செய்வார் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும், வாக்குப்பதிவு நிறைவடையும்வரை அவர் வரவில்லை. கோவையில் பல்வேறு தொகுதிகளுக்கு நேரில் சென்று பார்வையிட்டதால், வாக்களிக்க வரவில்லை என கூறப்படுகிறது.

செந்தில் பாலாஜி
1971, 1989 தேர்தல்| எதிர்க்கட்சிகளின் வாக்கு சிதைந்தால் என்ன நடக்கும்..? 2 வரலாற்று உதாரணங்கள்!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com