“வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்” - ஜெகன்மோகன் ரெட்டி அதிரடி

“வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்” - ஜெகன்மோகன் ரெட்டி அதிரடி

“வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்” - ஜெகன்மோகன் ரெட்டி அதிரடி
Published on

ஆந்திராவில் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் ரேஷன் பொருட்கள் அனைத்தும் வீட்டிற்கே சென்று விநியோகிக்க அம்மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

ஆந்திராவில் மக்களவைத் தேர்தலுடன் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் 151 இடங்களை கைப்பற்றி ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ், ஆட்சியை கைப்பற்றியது. அக்கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி முதலமைச்சராக பதவியேற்றார். இதனையடுத்து பல அதிரடி முடிவுகளையும் அவர் தொடர்ச்சியாக எடுத்து வருகிறார். அந்த வகையில் இந்தியாவில் இதுவரை இல்லாத அளவிற்கு 5 பேரை துணை முதலமைச்சராக்கினார். எஸ்.சி., எஸ்.டி., பழங்குடி, ஓபிசி மற்றும் மைனாரிடிட்டி என ஒவ்வொரு வகுப்பை சேர்ந்தவர்கள் இதில் இடம்பெற்றுள்ளனர். அத்துடன் 25 கேபினட் அமைச்சர்களும் பொறுப்பேற்றனர்.

இந்நிலையில் புதிதாக பதவியேற்ற 25 அமைச்சர்களுடன் ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில் ஆந்திராவில் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் ரேஷன் பொருட்கள் அனைத்தையும் வீட்டிற்கே சென்று விநியோகிக்க முடிவு செய்யப்பட்டது. அத்துடன் மாநில போக்குவரத்துக் கழகத்தை அரசே ஏற்று நடத்துவது என முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக, போக்குவரத்து, நிதித்துறை அமைச்சர் தலைமையில் சிறப்பு கமிட்டியும் ஏற்பாடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர்கள் ஏதேனும் தவறு, முறைகேடுகளில் ஈடுபட்டால் அவர்கள் கட்சி பதவியிலிருந்தும், அமைச்சரவையில் இருந்தும் நீக்கப்படுவார்கள் என முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com