இளைஞர் அஜித்குமார் மரணம் | “தண்ணீர் கூட கொடுக்காமல் சித்ரவதை” - ஹென்றி திஃபேன் பரபரப்புப் பேட்டி

சிவகங்கையில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் அஜித் குமார் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக வழக்கறிஞர் ஹென்றி திஃபேன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

சிவகங்கையில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் அஜித் குமார் கொடூரமாக தாக்கப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த வழக்கு தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய வழக்கறிஞர் ஹென்றி தீஃபேன், “எஃப்ஐஆர் இல்லாமலேயே விசாரணை தொடங்கப்பட்டிருக்கிறது. தண்ணீர் கூட கொடுக்காமல் மிளகாய் பொடு போட்டு சித்திரவதை செய்திருக்கின்றனர். சிசிடிவி காட்சிகளை அழிக்க முயற்சித்திருக்கின்றனர்” எனத் தெரிவித்தார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com